தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
Recommended Video

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு சில பகுதிகளில் பலத்த மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமாகியதால் கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக்கிடக்கின்றன.

அதேநேரம் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பல இடங்களி நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை(இன்று) முதல் சனி(ஆக.17), ஞாயிறு ( ஆக.18) ஆகிய மூன்று நாள்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்கள். வியாழக்கிழமை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 70 மில்லிமீட்டர் மழையும், திருத்தணி, திருவேலங்காடு, சோழவரம், அரக்கோணம் பகுதியில் தலா 60 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications