கடலோர மாவட்டங்களில் இன்று மழை... வானிலை மையம்
சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வியாழக் கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாரில் 80 மி.மீ. மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஆலங்காயம், திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் 50 மி.மீ. மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், தேனி, தருமபுரி, கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications