உளுந்தூர்பேட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! பட்டாசு, புத்தாடைகள் விற்பனை பாதிப்பு!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பட்டாசு, புத்தாடைகள் வாங்க மக்கள் போதிய அளவுக்கு வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று திடீரென பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், உளுந்தூர்பேட்டை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் புத்தாடைகள், புது மாப்பிள்ளைக்கு தங்க மோதிரம், பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், திடீரென பெய்த கனமழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திடீர் கனமழை காரணமாக கடைவீதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.



Click it and Unblock the Notifications
