நெல்லைக்கு இது முதல் முறை இல்லை! 1923-ல் நடந்த சம்பவம்.. பதம் பார்த்த பெருமழை.. ஷாக்கா இருக்கே
சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் தற்போது பெய்த பெருமழை 100 ஆண்டுகளுக்கு முன்பும், அதாவது கடந்த 1923 ஆம் ஆண்டும் பெய்து இருக்கிறது. அப்போதும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது.
டிசம்பர் மாதம் என்றாலே தற்போது கிலியை ஏற்படுத்தும் மாதமாக மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இயற்கை பேரிடர்கள் வருட இறுதியில் வந்து சம்பவம் செய்து விட்டு செல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த மாத துவக்கத்தில் சென்னையில் பெருமழை பெய்தது. சென்னை மாநகரமே சில நாட்கள் வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து மீள சென்னைக்கு கிட்டதட்ட ஒருவாரம் ஆகிவிட்டது.

சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கும் போதே தென் மாவட்டங்களை கனமழை மிரட்ட தொடங்கிவிட்டது. குறிப்பாக கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்தது. வரலாறு காணாத இந்த அதி கனமழை பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
100 ஆண்டுகளுக்கு முன்பும்: 2 நாள் பெய்த அதிகனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள காரையாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பெரு வெள்ளம், ஆங்காங்கே குளங்கள் மற்றும் ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு ஆகியவற்றின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தண்ணீர் தேசமாகியது. இந்த மழையால் சுமார் 10 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். 20 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்தன.
தற்போது பெய்த பெருமழை 100 ஆண்டுகளுக்கு முன்பும், அதாவது கடந்த 1923-ம் ஆண்டும் பெய்து இருக்கிறது. அப்போதும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. 1923-ம் ஆண்டு 42.3 செ.மீ. அளவுக்கு பதிவாகியிருக்கிறது. இதுபற்றி ஸ்ரீகாந்த் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
44 முறை 44 செமீ அளவு: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மொத்தம் 118 செ.மீ. அளவுக்கு மழை பெய்து இருக்கிறது. கடந்த 1923-ம் ஆண்டு பெய்த மழை காரணமாக ஒரு வாரத்தில் நெல்லையில் 44.2 செ.மீ. மழையும், தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையத்தில் 43.4 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. இதேபோல் பாளையங்கோட்டையில் 37.8 செ.மீ., தென்காசியில் 37.2 செ.மீ.யும் மழை பெய்துள்ளது.
1901-ம் ஆண்டில் இருந்து 1970-ம் ஆண்டு வரையிலான காலத்தில் தூத்துக்குக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 44 முறை 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்து இருக்கிறது. இதேபோல் 1914-ம் ஆண்டில் இருந்து 1970-வரையில் திருச்செந்தூரில் 47 முறை 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதுபோன்று பெருமழை பெய்யும் போதெல்லாம், அது சமவெளிப்பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்புகள்: 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு பேய்மழை பெய்தாலும் அப்போது ஆற்றங்கரையை ஒட்டிய சமவெளி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தற்போது இருக்கும் அளவுக்கு கிடையாது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு இருக்காது. எனவே தற்போது பெய்த பெருமழையால் ஏற்பட்டும் பாதிப்புகளுக்கு மொத்தமாக மழையை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. ஆக்கிரமிப்புகளுமே முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications