உங்க ஏரியால வெள்ளம் வடியலையா? இந்த நம்பர்ல கூப்பிடுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்கள் பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பெரம்பூர், ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

Help line numbers for report rain issues

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மீட்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில், மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது. இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)
மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)
மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)
தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )
ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)
திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)
அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)
அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)
தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)
கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)
வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)
ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)
அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)
பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)
சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)
மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125).

பொதுமக்கள் மேற்கொண்ட அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொண்டு, பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai corporation announces IAS officers cellphone number for rain issue complaints.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற