மாவோயிஸ்ட் தாக்குதலால் பலியான தமிழக வீரர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி: வீடியோ
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலால் பலியான தமிழக வீரரின் உடலுக்கு உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.
சேலம்: சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நக்சலைட்டுகள் தாக்குதலின் போது உயிரிழந்த கெங்கவல்லி வட்டம், நல்லூர், திட்டச்சேரியை சார்ந்த திருமுருகனின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினை சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த என்.திருமுருகன் பலியானார்.

இதனை தொடர்ந்து, அவரது உடல் சேலம் திருச்சிக்கு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான திட்டச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சொந்த ஊரில் அஞ்சலிக்காக திருமுருகனின் உடல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், திட்டச்சேரிக்கு சென்று திருமுருகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வீரரின் குடும்பத்தாரிடம், தமிழக முதல்வர் அறிவித்த 20 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையினை வழங்கினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications