தூத்துக்குடிக்குக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்பு செம்மர கட்டைகள்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட பல லடசம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ய முடியாமல் மாவட்ட நிர்வாகம் திண்டாடி வருகிறது.
தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் அருகே உள்ள மாதவன் நகரில் ஓரு குடோனில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் எடையிலான செம்மரகட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இவை தூத்துக்குடி வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை போலீசார் வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர். இந்த செம்மரக் கடத்தலில் அமெரிக்க ஆயுத கப்பலில் தொடர்புடைய சிலருக்கு தொடர்பு இருப்பது கூட தெரிந்தும் வனத்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்பு இல்லாத சிலரை கைது செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நான்கு கன்டெய்னரில் மேலும் செம்மரகட்டைகள் கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவற்றின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்டதுறைகளை சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை.
இந்நிலையில், செம்மரகட்டைகளை துபாய்க்கு வேறு பொருட்களுடன் போலி பில்கள் தயாரித்து கடத்த இருப்பதாக சுங்கதுறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக சோதனையை தீவிரப்படுத்தினர். இதனால் கடத்தல் புள்ளிகள் கன்டெய்னரை விட்டு விட்டு தப்பி சென்றனர். சுங்கதுறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications