ரூ500, ரூ1,000 நோட்டுகளை முன்வைத்து கொள்ளை கோதாவில் குதித்த மருத்துவமனைகள்!
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை பயன்படுத்தி மருத்துவமனைகளும் கொள்ளை கோதாவில் குதித்துள்ளன.
சென்னை: ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததுதான் தாமதம்... இதைவைத்து எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் என்ற போட்டிதான்.
நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்றபோதும் அடுத்த 72 மணிநேரத்துக்கு மருத்துவமனைகள், மருந்தகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இவை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தது. நடைமுறையில் இங்கு ரூ500, ரூ1,000 வாங்கிக் கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு ஸ்கேனுக்கு ரூ900 என நேற்று கட்டணத்தை நிர்ணயித்த நிறுவனங்கள் இன்று சில்லறை இல்லை என்பதால் ரூ1,000 என லம்ப்பாக வசூலிக்கின்றன.
மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் ரூ350தான் கட்டணம் என்றாலும் சில்லறை இல்லையே என்ற பல்லவியைப் பாடி மீதி தொகையை அமுக்குவதிலேயேதான் ஆலாய் பறக்கின்றனர்.
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இருந்து மாற்றுவதற்குள் மருத்துவமனைகளும் மருந்தகங்களும் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தே ஒருநாள் வியாபாரத்தை எளிதாக கல்லா கட்டிவிடும் நிலைதான் உருவாகி உள்ளது.
மத்திய அரசு என்னதான் விதிவிலக்கு என அறிவித்தாலும் இது தொடர்பாக புகார் தெரிவிக்க எந்த ஒரு ஏற்பாடும் செய்யாததால் ஏழை நடுத்தர மக்களின் பணத்தை கபளீகரம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பது பொதுமக்களின் ஆதங்கம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications