சொகுசு கார் வாங்குவதாக மோசடி... வங்கியில் ரூ.37 லட்சம் ஏமாற்றிய ஆந்திர ஹோட்டல் அதிபர் கைது
சென்னை: சொகுசு கார் வாங்குவதாகக் கூறி போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ. 37 லட்சம் கடன் வாங்கிய ஆந்திர ஹோட்டல் அதிபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பேலஸ் ரோடு குப்பத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் (33). ஹோட்டல் அதிபரான கமலேஷ், சென்னை ஆலந்தூரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சொகுசு கார் வாங்குவதாகக் கூறி ரூ. 37 லட்சம் கடன் பெற்றார்.

ஆனால், அந்தத் தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லை. வாங்கிய காரையும் வங்கிக்குத் தெரியாமல் விற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கமலேஷ் கொடுத்த ஆவணங்கள் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலந்தூரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் அஸ்வத் துரைசெல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமலேஷ் மீது புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், புகார் கூறப்பட்ட கமலேஷ் ஓட்டல் தொழில் மட்டும் அல்லாமல் பல்வேறு தொழில்களை செய்து, கமலேஷ் நஷ்டப்பட்டது தெரிய வந்தது.
அதோடு, போலியான வங்கி கணக்கு ஆவணம் மற்றும் வருமானவரி ஆவணங்களை காட்டி, தன்னை பெரிய பணக்காரராக சித்தரித்து கமலேஷ் பென்ஸ் கார் வாங்க கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று கமலேஷைப் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கமலேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications