Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

22 மீனவர்களை உடனே விடுதலை செய்த இலங்கை: ராமேஸ்வரத்தில் 'டேரா' போட்டு சாதித்தது யார்- ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்து அனுப்பி வைத்திருப்பது ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை ராஜ், கேசியர் ஆகியோரின் 2 படகுகள், கோடியக்கரையில் இருந்து கடந்த 15-ந் தேதி மீன்பிடிப்புக்காக சென்றன. இந்த 2 படகுகளில் மொத்தம் 22 மீனவர்கள் சென்றனர். கடலில் தங்கி மீன்பிடிக்க மீனவர்கள் சென்றிருந்தனர். இந்த 22 மீனவர்களும் பாம்பன், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள்.

How Srilanka Released 22 Tamilnadu Fishermen?

22 மீனவர்கள் கைது: இந்த நிலையில் கோடியக்கரை- இலங்கையின் பருத்திதுறை இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை 22 மீனவர்களையும் சுற்றி வளைத்தது. தங்களது நாட்டு எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. இந்த தகவல் ராமேஸ்வரம் மீனவர்களை கொந்தளிக்க வைத்தது. பொதுவாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும். நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவர். ஆனால் இம்முறை 22 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை: இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் வருகை தந்திருந்தார். அப்போது ராமேஸ்வரம் நாட்டு படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் மீனவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 133 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர் என்றனர்.

நிர்மலா சீதாராமன் தலையீடு: இந்த சந்திப்புகளின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 22 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன். அனைத்து மீனவர்களும் விரைவில் ராமேஸ்வரம் திரும்புவர் என உறுதி அளித்தார்.

உடனே விடுதலை: இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரையும் 2 படகுகளுடன் விடுதலை செய்வதாக அறிவித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மீனவர் சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் சீட் குறி?: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்கிற பேச்சு ஏற்கனவே உள்ளது. இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் வந்த நிலையில் இலங்கை கடற்படை 22 மீனவர்களை கைது செய்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையீட்டில் 22 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பது அக்கட்சியினர் நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+