ஆதங்கத்தை சொன்னால் அடிக்கிறார்கள்.. தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் குமுறல்!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தமிழிசையிடம் கேள்வி எழுப்பியதற்காக பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் தற்போது பேட்டி அளித்துள்ளார். தன்னுடைய ஆதங்கத்தைதான் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கதீர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தமிழிசையை பார்த்து, சோபியா என்ற மாணவி ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்றார். இது வைரல் ஆனது. அதன்பின், நேற்று எச்.ராஜா நீதிமன்றம் குறித்தும் போலீஸ் குறித்து தவறாக பேசி சிக்கலில் மாட்டினார்.
|
தாக்கினார்கள்
தற்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கதீர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜகவினர் அந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து இழுத்து வெளியே அனுப்பி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.

வருமானம் இல்லை
இந்த நிலையில் தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் பேட்டி அளித்துள்ளார். அதில் வண்டி வாடகை கொடுக்க கூட பணம் இல்லை என்னிடம். பெட்ரோல் போடவே வருமானம் சரியாக உள்ளது. தினமும் பெட்ரோலுக்கே எல்லா பணமும் செலவாகிறது. இதில் எப்படி குடும்பத்திற்கு பணம் கொடுப்பது. எப்படி வாடகை கொடுப்பது. எப்படி சாப்பிடுவது.

கன்னத்தில் அறைந்தனர்
அதனால்தான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்காக பாஜகவினர் என்னை தாக்கினார்கள். என் ஆதங்கத்தைதான் நான் சொன்னேன். அதற்கு போய் பாஜகவினர் என் கன்னத்தில் அறைந்தார்கள் என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய வைரல்
இந்த செய்தி இன்னும் தமிழகத்தில் வைரலாகவில்லை என்றாலும் ஆங்கில ஊடகங்களில் இது பெரிய செய்தியாக மாறியுள்ளது. வடஇந்திய ஊடகங்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வைத்து விவாதங்கள் நடத்தி வருகிறது. தொடர்ந்து பாஜக கட்சிக்கு அடிமேல் அடி விழுவதால் அந்த கட்சி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications