தேக்கமலை, மகாலட்சுமியை நான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது: திவ்யபாரதி!
துப்புரவு பணியாளர்கள் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியை தான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது என ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
மதுரை: துப்புரவு பணியாளர்கள் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியை தான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது என ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான திவ்யபாரதி மீது திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர் மதுரையிலுள்ள ஐ.ஜி-யிடம் புகார் அளித்தார். அதில் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தினக்கூலி துப்புரவுப்பணியாளராக பணிபுரிந்து வந்த தேக்கமலையும் அவர் மனைவி மகாலட்சுமியையும் திவ்ய பாரதி கடத்தி வைத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியுடன் ஆவணப்பட இயக்குநரான திவ்யபாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேக்கமலையையும் மகாலட்சுமியையும் நான் கடத்தியதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தங்களை யாரும் கடத்தவில்லை என்று தேக்கமலை மகாலட்சுமி தம்பதியினர் கூறியுள்ளனர். பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெளியூர் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications