பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரும் கருத்து சொல்லக்கூடாது- தம்பிதுரை
எச்.ராஜா, எஸ்.வி சேகர் கருத்துகளை நான் இன்னும் பார்க்கவில்லை அதனால் கருத்து கூற விரும்பவில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரின் கருத்துகளை நான் பார்க்காததால் அதுகுறித்து கருத்து கூற விரும்பில்லை என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்ட பெண் பத்திரிகையாளரையும் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் இழிவுபடுத்தி பதிவிட்டு இருந்தார். இதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரின் கருத்துகளை ட்விட்டரில் இன்னமும் பார்க்கவில்லை.
அதனால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications