நான் மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை - ஹெச். ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்கியதில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி தினமும் ஊடகங்களுக்கு தீனி போடுபவர் ஹெச். ராஜா. கடந்த இரு தினங்களாகவே சூடான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சசிகலா தினகரன் பற்றியும், திராவிட மண் பற்றியும், தனது படிப்பு பற்றியும் பதிவிட்டுள்ளார் ஹெச். ராஜா.

பள்ளிக்கு சென்றதில்லை

நீங்கள் என்ன படித்தீர்கள், எங்கு படித்தீர்கள் என்று கேட்டதற்கு நான் மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை என்று பதிவிட்டுள்ளார். ஹெச். ராஜா.

ஹெச். ராஜாவின் கோபம்

உணர்ச்சியற்ற ஜென்மங்கள். சோற்றாலடித்த பிண்டம் என்ற ஹெச். ராஜாவின் பதிவு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

திராவிட மண்

செம்மண், கரிசல் மண், வண்டல் மண் வரிசையில் திராவிட மண்ணுமா என்று கேட்டுள்ளார். இது யாருக்கான பதிவு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குடும்பங்களிடமிருந்து விடுபடும்

தினகரன் நீக்கம் பற்றி கருத்து கூறியுள்ள ஹெச். ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா மற்றும் தினகரன் அ.தி.மு.க-விலிருந்து முதல்வரால் நீக்கம். தமிழகம், திருக்குவளை மற்றும் மன்னார்குடி குடும்பங்களிடமிருந்து விடுபடும் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP's H Raja has said in a tweet that he never studied in school.
Please Wait while comments are loading...