விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம்
சென்னை: எம்.எல்.ஏ விஜயதாரணியை ஒருபோதும் தாம் தரக்குறைவாக பேசியதில்லை என்று தமிழக காங்கிரஸ்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த எம்.எல்.ஏ.விஜயதாரணி மாநிலத் தலைவர் இளங்கோவனை சந்தித்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தான் வைத்த பேனரை சிலர் அகற்றிவிட்டதாக இளங்கோவனிடம் புகார் கூறினார். மேலும், அந்த பேனர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விஜயதாரணி புகார்
தன்னை இழிவுபடுத்தும் இந்த செயலலில் ஈடுபட்டவர்கள் மீது கட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால், அதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயதாரணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளங்கோவனிடம் வாக்குவாதம்
இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது இளங்கோவன் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

சோனியாவிற்கு கடிதம்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பெண் என்றுகூட பாராமல் தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். அவரது கோபத்தால் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படக்கூடும் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தாம் ஒருபோதும் எம்.எல்.ஏ விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். எப்போதும் பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதில்லை என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எது எப்படியோ சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கலாட்டா வேடிக்கையாக இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications