காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:

If congress fight alone Elangovan to become CM, says khushboo

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.

பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா?

2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+