ஆகாயத்திலேயே பறந்தாலும் தேர்தல் வந்தால் கீழே இறங்கதான் வேண்டும்.. மோடியை விளாசிய ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி...வீட்டில் கருப்புக் கொடி- வீடியோ

  சிதம்பரம்: ஆகாயத்தில் பறந்தாலும் தேர்தல் வந்தால் கீழே இறங்கதான் வேண்டும் என பிரதமர் மோடியை ஸ்டாலின் விளாசியுள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

  If you fly in the air, you have to come down for the election: Stalin on Modi

  இன்று காலை நாகை மாவட்டம் வைத்தீஷ்வரன் கோவிலில் இருந்து பயணத்தை தொடங்கிய ஸ்டாலின் விவசாயிகளுடன் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் சிதம்பரம் சென்ற அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

  அப்போது மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திமுக விடுத்த வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றி உள்ளனர் என்றார். நேரு, இந்திராவுக்கும் கருப்புக்கொடி காட்டி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

  போராட்டம் காரணமாக இரவோடு இரவாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர், சென்னையில் கருப்பு போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றார்.

  ஆகாயத்திலேயே பறந்தாலும் தேர்தல் வந்தால் கீழே இறங்கிதான் வந்தாக வேண்டும் என்ற ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிரான கருப்பு போராட்டத்தை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working president Stalin has said If you fly in the air, you have to come down to the election in Chidambaram meeting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற