For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் உங்களை மட்டும் கொசு "ஓ"வரா கடிக்குதுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

மனிதர்களில் மற்ற வகை ரத்தப் பிரிவினரை விட ஓ வகை ரத்தப் பிரிவு கொண்டவர்களைத்தான் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வு ஒன்று செல்கிறது.

Google Oneindia Tamil News

புளோரிடா: கொசுக்கள்.. பிறந்தோமா, நாலு பேரைக் கடிச்சோமா... நல்லா ரத்தம் குடிச்சோமா என்று திரியும் சுகவாசிகள்...! எந்த வேலையும் இல்லை இந்த கொசுக்களுக்கு. கடிப்பதும், குடிப்பதும் மட்டுமே இதன் தொழில். உலகத்திலேயே சூப்பர் டூப்பர் சோம்பேறிகள் இவை மட்டும்தான். இந்த கொசுக்கள் பார்க்கத்தான் தம்மாத்தூண்டு.. ஆனால் இவர்களால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் எத்தனை எத்தனை..!

மழைக்காலம் வரப் போகிறது இல்லையா.. கண்டிப்பாக நாம் கொசுக்கள் குறித்தும், கொசுக்கடி குறித்தும் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டும். கொசுக்கள் மொத்தமே 3 வகைதான்... ஆனால் அது கடிப்பதில்தான் எத்தனை வகை. விதம் விதமாக கடிப்பது கொசுக்கள் மட்டுமே.

அதை விட முக்கியம் குறி பார்த்துக் கடிப்பதில் கொசுக்கள் கில்லாடி. ஆள் பார்த்துப் பேசு என்பார்கள் இல்லையா.. அது போலவே ஆளுக்கு ஆள் கொசுக்கடி மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடி கிடைப்பதில்லை. இது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொசுக்கடியால் என்னென்ன சிக்கல் வரும் தெரியுமா.. இதைப் படிங்க!

நாய்களே ஜாக்கிரதை!

நாய்களே ஜாக்கிரதை!

நாய்களை கொசுக்கள் கடித்தால் அந்த நாய்களுக்கு இதயமே நின்று போகும் அளவுக்குப் பெரிய பிரச்சினை ஏற்படுமாம். அதாவது நாய்களை கொசுக்கள் கடிக்கும்போது ஹார்ட்வோர்ம் (heartworm ) எனப்படும் இதய நோய் ஏற்படுகிறது. அதாவது கொசுக்கள் மூலமாக நாய்களின் ரத்தத்தில் புழுக்கள் பரவுகின்றன. இந்தப் புழுக்கள் ரத்த நாளங்களை காலி செய்து விடுமாம். இதனால் பாதிக்கப்பட்ட நாய்களின் இதயம் செயலிழந்து போய் விடுமாம்.

மாசுபட்ட தண்ணீர்

மாசுபட்ட தண்ணீர்

கொசுக்களுக்கு தண்ணீர் என்றால் இஷ்டம். அதிலும் மாசுபட்ட கழிவு நீர் என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். அங்குதான் அதிக அளவில் கொசுக்கள் முட்டை போடுகின்றன, பல்கிப் பெருகுகின்றன.

இது நல்ல டேஸ்ட் உடம்பு பாஸ்!

இது நல்ல டேஸ்ட் உடம்பு பாஸ்!

கொசுக்கள் ஒருவரைக் கடிக்கும் முன்பு தான் கடிக்கப் போவது யார், அது நமக்குச் சரிப்பட்டு வருமா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்குமாம் (தம்மாத்தூண்டு கொசு எப்படியெல்லாம் "ஜிந்திக்குது" பாருங்க!). தனக்குப் பிடித்தமான நபரைத்தான் அது கடிக்குமாம்.

ஓ வகை ஓஹோ!

ஓ வகை ஓஹோ!

மெடிக்கல் என்டமாலஜி ஜர்னல் (Journal of Medical Entomology) இதுகுறித்த விரிவான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஓ வகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களைத்தான் கொசுக்கள் அதிகமாக கடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களைத்தான் கொசுக்கள் குறி வைத்து குதறி எடுக்குமாம்.

83 சதவீதம்

83 சதவீதம்

கொசுக்கள் குறி வைக்கும் ரத்தப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 83 சதவீதம் ஓ பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அடுத்த இடத்தில் பி, ஏ மற்றும் ஏபி ஆகியவை உள்ளனவாம். ஓ பிரிவு ரத்தம்தான் கொசுக்களை எளிதாக ஈர்க்கிறதாம். இதனால்தான் ஓ பிரிவினர் அதிக அளவில் கொசுக்கடிக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

குப்பை சேர விடாதீங்க

குப்பை சேர விடாதீங்க

இதுகுறித்து புளோரிடா சுகாதாரத் துறையினர் கூறுகையில், கொசுக்கள் ஓ பிரிவு ரத்த வகையினரை அதிகம் கடிக்கிறது உண்மைதான் என்றாலும் கூட மற்றவர்களைக் கடிக்காது என்று கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நாம் வசிக்கும் இடம் சுத்தமாகவும், கழிவு நீரோ அல்லது அழுக்கு நீரோ தேங்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது என்றனர்.

உண்மைதான்.. கொசு இருந்தால்தானே கடிக்கும்.. எனவே கொசுக்கள் தங்குவதைத் தடுத்தாலே பாதிக் கடியையும் தவிர்க்க முடியும். மழை வரப் போகிறது, மக்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் கொசுக்கடி குறைய வாய்ப்புண்டு.

English summary
Mosquitos prefer O group blood people than others to bit, finds a studey by a Florida based institute. O group people are more vulnerable for mosquito bites, the study says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X