நீ மாட்டுக்கறி விழாவில் கலந்துகிட்டியா? சாப்பிட்டுக் கொண்டிருந்த சூரஜ் மீது வெறித்தாக்கல்
ஐஐடி வளாகத்தில் உள்ள கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் சூரஜ் மீது இந்துத்துவ மாணவர் அமைப்பினர் வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை: ஐஐடி மாணவர்கள் மாட்டுக்கறி விழாவில் கலந்து கொண்டதற்காக இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

மாட்டுக் கறி விழா
இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுகறி திருவிழா நடைப்பெற்றது. இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

6 பேர் கொண்ட கும்பல்
இதனைத் தொடர்ந்து, மாட்டுக்கறி விழாவில் கலந்து கொண்ட சூரஜ் என்ற மாணவர் இந்துத்துவ மாணவர் அமைப்பால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் அபினவ் கூறியதாவது: மதியம் 1.30 மணியளவில் சூரஜ் மற்றும் அவரது நண்பரும் ஐஐடி வளாகத்தில் இருக்கும் மெஸ்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலதுசாரி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் அவர்களிடம் சென்றனர்.

பெயரைக் கேட்டு தாக்கிய கும்பல்
அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட அந்த கும்பல் மாட்டிறைச்சி பண்டிகையில் கலந்து கொண்டவர்களா நீங்கள் என்று கேட்டுள்ளது. ஆமாம் என்ற சூரஜ் சொன்னதும் அந்த கும்பல் பயங்கரமாக அடித்து தாக்கியுள்ளது.

ஐஐடி டீனிடம் புகார்
இதுகுறித்து ஐஐடி டீன் மற்றும் போலீஸ்சிடம் புகார் தெரிவித்துள்ளோம். நாங்கள் அனுமதி பெற்றே இந்த விழாவை நடத்தினோம். மாட்டிறைச்சி விழா நடத்திய பின்னர், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றீர்கள். உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டி வந்தார்கள். இன்று நேரடியாக அடித்துவிட்டனர் என்று அபினவ் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications