பவானி ஆறு கூவத்தில் கலக்கலாமோ.. கூடாது.. விஜயகாந்த்தும் எங்களுடன்தான் சேர வேண்டும்- இளங்கோவன்
சென்னை: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரும்பினால் அவர் காங்கிரஸுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். அப்போதுதான் அது முடியும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில், 'ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு கட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசு. இதற்காக மேலும் சில சட்டங்களை நிறைவேற்ற இருக்கிறோம். ஊழல் செய்தவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தது, மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால்தான் முடியும்.
தேமுதிக. சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. எனவே ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும். பவானி ஆறு காவிரியில்தான் கலக்க வேண்டும். கூவத்தில் கலக்க கூடாது. விஜயகாந்த் எனது நண்பர். அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஊழலை ஒழிக்க வேண்டும்.
ஆம்ஆத்மி கட்சி நடைபெறாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கிறது. கிடைத்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வில்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அங்கு நிலைமை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் அதை திசை திருப்ப மற்றவர்கள் மீதும் காங்கிரஸ் மீதும் குறை சொல்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அந்த கட்சியை மக்கள் அந்த கட்சியின் சின்னமான துடைப்பத்தை வைத்தே விரைவில் விரட்டியடிப்பார்கள் என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications