கள்ளக்காதலியை நள்ளிரவில் ஆற்றங்கரையில் கொன்று புதைத்த கள்ளக்காதலன்: ஏன் தெரியுமா?
வேலூர் அருகே வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் ஆற்றங்கரையில் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருப்பத்தூர்: வேலூர் அருகே வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் ஆற்றங்கரையில் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் அருகே உள்ள ரெட்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் பசுபதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
32 வயதான இவர் நாச்சியார்குப்பத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சதிஷுடன் பழக்கம்
கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான டெய்லர் சதீஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல்
தனிமையில் தவித்த சுதாவுக்கு சதீஷ் உடனான பழக்கம் சந்தோஷத்தை தந்துள்ளது. இதனால் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கணவன் மனைவி போல்
இருவரும் பல்வேறு இடங்களில் அடிக்கடி சுற்றித்திரிந்து வந்தனர். சுதாவும் சதீஷும் வீட்டில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததோடு இருவரும் கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

திருமணம் செய்ய முடிவு
சுதாவும், சதீஷும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் சதீஷ் நேற்றிரவு சுதாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வேரு ஒருவருடன்
அப்போது வீட்டில் சுதாவும் வேறு ஒரு நபரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பார்த்த சதீஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

தப்பிய நபர்
அதே நேரத்தில் சதீஷ் வருவதை கண்ட சுதாவும், உல்லாசமாக இருந்த அந்த நபரும் ஒன்றுமே நடக்காதது போல் நடித்தனர். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வேறு ஒருவருடன் எப்படி?
தனது கண்களால் கண்டதை நம்ப முடியாமல் கடும் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், 'என்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் எப்படி நீ உல்லாசமாக இருந்தாய்' என்று சுதாவிடம் தட்டிக்கேட்டார்.

சமாதானம்
மேலும் தகாத வார்த்தைகளாலும் சுதாவை திட்டியுள்ளார் சதீஷ். இதனால் இருவருக்கும இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடந்த தகராறில் அதிகாலை 2 மணிளவில் இருவரும் சமாதானமடைந்துள்ளனர்.

தீர்த்துக்கட்ட முடிவு
ஆனாலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசையுடன் இருந்த சதீஷ்க்கு சுதா செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் சதீஷ்.

ஆற்றங்கரையில் உல்லாசம்
அதன்படி கள்ளக்காதலி சுதாவிடம் நைசாக பேசி சற்று இதமாக காற்றாடலாம் என அங்குள்ள ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றபிறகு தனிமையில் 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சுதாவை கொன்ற சதீஷ்
ஆனால் உள்மனதில் துரோகத்தின் காயத்தால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், உல்லாசம் அனுபவித்ததோடு அங்கிருந்த கல்லை தூக்கிப்போட்டு சுதாவை துடிக்க துடிக்க கொன்றார்.

போலீஸில் சரண்
பின்னர் உடலை ஆற்றங்கரையிலேயே குழி தோண்டி புதைத்தார் சதீஷ். பின்னர் நேற்று காலை சதீஷ் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கொலை செய்து ஆற்றில் புதைத்துவிட்டேன் எனக்கூறி சரண் அடைந்தார்.

போலீஸ் அதிர்ச்சி
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஆற்றுப்பகுதியில் சடலத்தை புதைத்த இடத்தை தேடினர். பின்னர் சுதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications