கள்ளக்காதலுக்காக கணவன் கொலை.. 3 மாத குழந்தையை தவிக்கவிட்டு சென்ற மனைவிக்கு வலைவீச்சு
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலைபாதையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அழுகிய நிலையில் கழுத்தறுக்கப்பட்ட ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் இறந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து முகம்மது சபீரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருமணமாகி
அப்போது கள்ளக்காதலன் ஆசிப்புடன் சேர்ந்து கணவரை கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில் முகம்மது சபீருக்கும் பர்தோஷுக்கும் திருமணமாகி மூன்று மாத குழந்தை உள்ளது.

பிரித்து விடுவார் என பயம்
இந்நிலையில் பர்தோஷுக்கு ஓலா கார் ஓட்டுநர் ஆசிப்புடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது எனது கணவருக்கு தெரிந்தால் இருவரையும் பிரித்து விடுவார் என பர்தோஷ் அச்சமடைந்துள்ளார்.

கொடைக்கானலுக்கு டூர்
இதையடுத்து கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததை அடுத்து அவரை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம் என சபீரை கடந்த 14-ஆம் தேதி அழைத்து சென்றார் பர்தோஷ்.

சடலம் வீச்சு
பர்தோஷ், சபீர், மூன்று மாத குழந்தை ஆகியோர் ஆசிப்பின் காரிலேயே சென்றனர். அப்போது முகம்மது சமீரை காரில் வைத்து இருவரும் கொலை செய்துவிட்டு சடலத்தை டம்டம் பாறை அருகே வீசிவிட்டனர்.

உறவினர்கள் தகவல்
இதையடுத்து நேராக மங்களூரில் உள்ள வீட்டுக்கு சென்று குழந்தையை விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் ஆசிப்புடன் பர்தோஷ் சென்றுவிட்டார் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அதிர்ச்சி சம்பவம்
இதையடுத்து தேவதானப்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பர்தோஷ், கள்ளக்காதலன் ஆசிப் ஆகியோரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்று விட்டு 3 மாத குழந்தையை நிர்கதியாய் வீட்டில் விட்டுவிட்டு தாய் கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications