காணாமல் போன தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி... நித்யானந்தா சீடர்களுக்கு தொடர்புள்ளதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: தொண்டை மண்டல ஆதீன மடாதிபதியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த மடத்துக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளதால் ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொண்டை மண்டல ஆதீன மடாதிபதியாக இருப்பவர் திருவம்பல தேசிய ஞான பிரகாச பரமாசியார். இவர் இந்த ஆதினத்தின் 232 ஆவது மடாதிபதியாவார். இந்த மடத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றின் இன்றைய மதிப்பு 1000 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

In kanjipuram a abbot missed according to police complaint and police searching him

இந்நிலையில் அவர் திடீரெனக் காணாமல் போனதாக தொண்டை மண்டல ஆதீன முதலியார் சங்கத்தின் மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸில் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Swami Nithyananda and Ranjitha visits Tirumala in new look

இந்நிலையில், தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை வைத்து, ஆதீன சீடர்கள் பூஜை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மடாதிபதிக்கு நித்யானந்தா சீடர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதா? அவர்களால் கடத்தப்பட்டாரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு நித்யானந்தா, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பின்பு விரட்டியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Kanjipuram, sivakanji police station a complaint got that a abbot missed and his madam having assets worth about 1000 cr.rupees and police is searching him
Please Wait while comments are loading...