தனது உறவுகளின் பெயர்கள் இந்த பட்டியலில் வந்துள்ளதா என பதட்டத்துடன் பார்க்கும் மீனவ தாய்மார்கள்!

கன்னியாகுமரி அருகே ஓகி புயலால் மாயமான மீனவர்களின் பட்டியலை அப்பகுதி தாய்மார்கள் பதட்டத்துடன் பார்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான மீனவர்களின் பட்டியலை அப்பகுதி தாய்மார்கள் பதட்டத்துடன் பார்த்து வருகின்றனர்.

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடலில் இருந்தபடியே கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் , மின்கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன.

In Kanniyakumari Marthandam village a banner kept with the name list of missing fishermen

கனமழையால் சுசீந்திரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாயினர்.

மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறை கிராமத்தில் மாயமான மற்றும் இதுவரை தகவல் தொடர்பில் வராத மீனவர்கள் குறித்த பட்டியல் கொண்ட பாதகை வைக்கப்பட்டுள்ளது.

இதனை அப்பகுதி தாய்மார்கள் தங்களின் வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் இருக்கிறதா என பதட்டத்துடனும் கண்ணீருடனும் பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+