சென்னையில் பல இடங்களில் கன மழை.. மழை தொடரும் என வானிலை மையம் தகவல்
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தலைநகர் டில்லியில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஆய்வுமையம் தகவல்
இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மழை
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

சென்னைவாசிகள் குதூகலம்
வானிலை மையம் அறிவித்திருந்தபடியே, சென்னையில் இன்று மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தெளிவாக இருந்த வானம் இன்று பிற்பகலில் கருமேகம் சூழ்ந்துவிட்டது. இதனை கண்ட சென்னைவாசிகள் குதூகலமடைந்தனர்.

ஜில்லென்றது சென்னை
பின்னர், சென்னை தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை பெய்ததால், சென்னையே ஜில்லென்று காணப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications