ஜெ. உதவியாளர் பூங்குன்றன் வீட்டிலும் ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

Income tax officials raiding at Jayalalitha's most trusted person Poongundran's house

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு நேரு நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடி வரை சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் முழுவதும் அலசி ஆராய்ந்தனர். மேலும் வீட்டில் இருந்த பூங்குன்றன், அவரது மனைவி மற்றும் தாயாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2 வாடகை கார்களில் வந்த 12 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ஆணையர் தலைமையில் இந்த குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax officials raiding at Jayalalitha's most trusted person Poongundran's house. IT officials raiding Sasikala family and supporters house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற