இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் வீட்டில் நடந்து வந்த ரெய்டு நிறைவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலா குடும்பத்தினரிடம் மீண்டும் வருமான வரி சோதனை- வீடியோ

சென்னை: இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் வீட்டில் நடந்து வந்த ரெய்டு நிறைவடைந்துள்ளது.

சசிகலாவின் உறவினர்களின் வீடு, அலுவலகம், மிடாஸ் தொழிற்சாலை, ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் சினிமாஸ் என தமிழகம், கர்நாடகா மாநிலம் உட்பட 187 இடங்களில் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை 5 நாட்கள் இடைவிடாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனை நடத்தினர்.

Income tax raid concluded at Ilavarasi's son law Karithikeyan house

இந்த சோதனையில் 1500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய சோதனை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அடையார் கற்பகம் கார்டனில் வசித்து வரும் இளவரசியின் மருமகனும் கிருஷ்ணப்பிரியாவின் கணவருமான கார்த்திகேயன் வீடு, வடபழனி தனலட்சுமி காலனி முதல் தெருவில் உள்ள சாய் எண்டர்பிரைசஸ் மற்றும் சாய் கார்டன்ஸ் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த இந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக தற்போது சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax raid concluded at Ilavarasi's son law Karithikeyan house. IT conducts raid at sasikala relatives house at second time.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற