70வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் ஜெ...
சென்னை: 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகத்துக்கு அப்துல் கலாம் விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவரது காருக்கு முன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

கோட்டையில் முதல்வரை தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வரவேற்றார். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே சுதந்திர தின உரையாற்றினார். இந்த விழாவில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, சட்டசபை தலைவர் தனபால், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் அப்துல் கலாம் விருதை சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications