Breaking Live: தமிழகத்தில் சுதந்திர தின விழா.. கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் 72வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிப் பேசினார்.

    Independence day Celebrations in Tamil Nadu - Live updates

    தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகளையும் அவர் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக காவலர் அணிவகுப்பையும் முதல்வல் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவது இது 2வது முறையாகும்.

    Aug 15, 2018, 4:48 pm IST

    கோழிக்கோடு மாவட்டத்திலும் பலத்த மழை

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ ஆரம்பித்துள்ளது

    கோழிக்கோடு மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு என தகவல்

    வயநாடு செல்லும் சாலைகள் பெருவெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன

    Aug 15, 2018, 4:41 pm IST

    கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்கிறது

    வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதால் மக்கள் அதிர்ச்சி

    ஏற்கனவே வயநாடு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது

    Aug 15, 2018, 4:35 pm IST

    கேரளாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 58 பேர் பலி

    இன்று ஒரே நாளில் 13 பேர் பலியானார்கள்

    Aug 15, 2018, 4:32 pm IST

    முல்லை பெரியாரை ஒட்டிய தமிழக பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

    இடுக்கி அணையில் இருந்து அதிக நீர் திறந்து விடப்படுவதால் வெள்ள எச்சரிக்கை

    கேரளாவில் 7 மாநிலத்திற்கு பெரும் வெள்ள எச்சரிக்கை

    Aug 15, 2018, 3:52 pm IST

    ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 1.90 லட்சம் கன அடி நீர் வருகிறது

    ஒகேனக்கலில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

    கர்நாடகத்திலிருந்து தொடர்ந்து பெருமளவில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது

    Aug 15, 2018, 3:30 pm IST

    உடன்பிறப்புகளே உங்களை நம்பி உறுதியேற்கிறேன் - ஸ்டாலின்

    உங்களின் ஒருவனாகப் பயணிக்கிறேன்

    கலைஞரின் மகனாக உங்களிடம் நிற்கிறேன் - ஸ்டாலின்

    Aug 15, 2018, 3:26 pm IST

    சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன்! - ஸ்டாலின்

    திமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்

    நெஞ்சில் அண்ணா,கலைஞர் நினைவேந்தி; கொள்கைக் கொடியேந்தி; இலட்சிய வழி நடப்போம்

    தலைவரை இழந்து இன்னமும் வேதனைக் கடலில் எல்லோரது மனதும் தத்தளித்துக்கிறது - ஸ்டாலின்

    Aug 15, 2018, 3:23 pm IST

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
    Aug 15, 2018, 9:44 am IST

    தமிழ்நாடு தொழில்துறையில் பீடு நடை போடுகிறது - முதல்வர் பெருமிதம்
    Aug 15, 2018, 9:43 am IST

    தமிழகம் இந்தியாவிலேயே 2வது சிறந்த பொருளாதாரமாக திகழ்கிறது - முதல்வர்

    2017-18ல் 56% கூடுதல் நேரடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன - முதல்வர்

    Aug 15, 2018, 9:43 am IST

    2019 ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் - முதல்வர் பேச்சு

    11 அரசுத் துறைகளிலிருந்து தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான சேவை எளிதாக்கப்பட்டுள்ளது

    Aug 15, 2018, 9:43 am IST

    ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023ஐ விரைவில் எட்டுவோம் - முதல்வர்
    Aug 15, 2018, 9:40 am IST

    தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது - முதல்வர்

    எரிசக்தித் துறையில் புதிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது - முதல்வர்

    நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது

    Aug 15, 2018, 9:39 am IST

    தமிழகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு - முதல்வர்

    உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

    இந்தியாவிலேயே 2வது இடத்தில் உள்ளது தமிழகம் - முதல்வர் பேச்சு

    Aug 15, 2018, 9:38 am IST

    தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 13,000லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும்

    வீடில்லாத ஏழைகளுக்கு ரூ. 20 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும் - முதல்வர்

    Aug 15, 2018, 9:34 am IST

    பிளாஸ்டிக்கை தடை செய்யும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது - முதல்வர்

    7வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது - முதல்வர் பேச்சு

    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி

    Aug 15, 2018, 9:33 am IST

    தமிழகத்தில் அனைவரும் குடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர்- முதல்வர்

    ஜாதி, மதம் மறந்து அனைவரும் வாழ்ந்து வருகின்றனர் - முதல்வர்

    சென்னையில் இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது- முதல்வர்

    ஜெருசேலம் செல்லும் கிறிஸ்தவ பயணிகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படுகிறது - முதல்வர்

    Aug 15, 2018, 9:31 am IST

    அத்திக்கடவு அவிநாசி திட்டம் மாநில நிதியிலேயே செயல்படுத்தப்படவுள்ளது - முதல்வர்

    கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படவுள்ளது - முதல்வர் எடப்பாடி

    Aug 15, 2018, 9:31 am IST

    தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி - முதல்வர்

    குடிமராமத்து திட்டத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது - முதல்வர் தகவல்

    ஏரிகளில் படிந்துள்ள மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக தருகிறோம் - எடப்பாடி

    Aug 15, 2018, 9:30 am IST

    இது விவசாயிகள் நலனுக்கான அரசு - முதல்வர்

    தமிழகத்தில் 2ம் பசுமைப் புரட்சியை எடுக்க நடவடிக்கை - முதல்வர் பேச்சு

    உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம் - முதல்வர்

    டெல்டா விவசாயிகள் நலனைப் பாதுகாக்க குறுவை திட்டம்- முதல்வர்

    கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு - முதல்வர் உரை

    Aug 15, 2018, 9:27 am IST

    காவிரி பிரச்சினையில் தீர்வு கண்டவர் ஜெயலலிதா - முதல்வர்

    தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் - முதல்வர்

    மழை வரவால் 2 முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியது - முதல்வர் எடப்பாடி

    ஜெயலலிதா வழி வந்த அரசு அனைவருக்கும் கல்வி தருவதில் உறுதியாக உள்ளது - எடப்பாடி

    பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - முதல்வர் பேச்சு

    Aug 15, 2018, 9:26 am IST

    சுதந்திரப் போராட்டத்தின் முதல் வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது - முதல்வர்

    ஜெயலலிதா வழி வந்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுகிறது - முதல்வர்

    தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் ஜெயலலிதா - முதல்வர்

    Aug 15, 2018, 9:23 am IST

    சுதந்திரத்திற்காக எண்ணற்ற தமிழர்கள் இன்னுயிரை நீத்துள்ளனர் - முதல்வர்

    தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தலைவர்கள், பொதுமக்கள் தியாகம் செய்துள்ளன ர் - முதல்வர்

    Aug 15, 2018, 9:21 am IST

    2வது முறையாக தேசியக் கொடி ஏற்றியதை பெருமையாக கருதுகிறேன் - முதல்வர் எடப்பாடி
    Aug 15, 2018, 9:21 am IST

    காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட பின்னர் கொடி ஏற்றினார் முதல்வர்

    கோட்டைக் கொத்தளத்தில் உரை நிகழ்த்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    Aug 15, 2018, 9:20 am IST

    கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
    Aug 15, 2018, 9:20 am IST

    சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா

    சென்னை கோட்டையில் 2வது முறையாக தேசியக்கொடியை ஏற்றவுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    அணிவகுப்பை பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+