ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவே இல்லை.. சொல்வது திண்டுக்கல் சீனிவாசன்
ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவே இல்லை என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை. கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது தவறானது.
கடலோர காவல்படை சுடவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதுதான் சரியானது.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications