For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் இந்திரா பானர்ஜி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜய்கி‌ஷன் கவுல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கடந்த மாதம் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் வகித்துவந்தார்.

Indira banerjee sworn as Madras High Court Chief Justice today

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டெல்லி ஹைகோர்ட்டு நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை ஹைகோர்ட்டு தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காலை சுமார் 9.30 மணியளவில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமையையும் இந்திரா பானர்ஜி பெற்றுள்ளார்.

English summary
Indir banerjeesworn as Madras High Court Chief Justice today. Indira banerjee will be the 47th Chief justice of madras high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X