இந்திரா காந்தியின் 97வது பிறந்த நாள்.. தமிழக காங்கிரஸார் அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 97வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் அவருக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆகியோரும் சக்தி ஸதலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்திலும் காங்கிரஸார் இந்திரா காந்தி பிறந்த நாளைக் கொண்டாடினர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் இந்திராவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ யசோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ரோசய்யா
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திரா காந்தி படத்திற்கு ஆளுநர் ரோசய்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications