For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் மத்திய அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Interim railway budget disappointing: Jayalalithaa
சென்னை: இடைக்கால ரயில்வே பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: ''ரயில்வே இடைக்கால பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.

புதிய ரயில்களில் பெரும்பாலானவை வடக்கு மாநிலங்களுக்கு விடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை காட்டுகிறது

தமிழக மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அறிவிப்பு ரயில் பட்ஜெட்டில் இல்லை. இருப்பினும் இது இடைக்கால பட்ஜெட் தான். 2014 ஆம் ஆண்டு ஜூனில் அமையும் புதிய அரசு தமிழக மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் விதமான ரயில்வே பட்ஜெட்டை நிச்சயம் தாக்கல் செய்யும்'' எனக் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa Wednesday termed the interim railway budget as "extremely disappointing", and said the centre was disowning its responsibility on fixing rates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X