For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளி விழா காணும் சென்னை எத்திராஜ் கல்லூரி தமிழ்த்துறை.. பன்னாட்டு கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் வெள்ளி விழா ஆண்டில், பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந. அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேஸ்வரி, பேராசிரியை முனைவர். பா. கெளசல்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏற்றமிகு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழித் துறை இன்று அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சியுற்றிருக்கிறது.

International seminar on Tamil language in Ethiraj College

வெள்ளிவிழாக் கண்ட தமிழ்த்துறை இவ்வாண்டில் தமிழ் மொழியின் மேன்மையையும் சிறப்பையும் பயன்பாட்டினையும் எடுத்துரைக்கும் நோக்கில் ‘பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ்'என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்துகிறது.

இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், பேராளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பிற துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பங்கேற்று, தமிழை எந்தெந்தத் துறைகளிலெல்லாம் இன்னும் வலிமையுடன், வளமுடன், முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பிச் சிறப்பிக்க வேண்டுகிறோம். பயன்பாட்டுத் தமிழுக்கு தங்களால் இயன்ற பங்கினை ஆற்றிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளன.

English summary
An International seminar has been arranged on Tamil language in Ethiraj College, Chennai on the silver jubilee year of the Tamil department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X