மகனை மேயராக்கி அழகுபார்க்க நினைக்கும் ஜெயக்குமார்... களப்பணிகள் தீவிரம்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனை சென்னை மாநகராட்சி மேயராக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளதால் இப்போதே அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டார்.
திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்க்க முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் சென்னை மாநகர அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசை வெயிட்டாக கொடுத்து அசத்தியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

அமைச்சர் மகன்
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் மகன் ஜெயவர்தனை களமிறக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக நிர்வாகிகளை இப்போதே தன் வசப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

களப்பணி
திமுக சார்பில் நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும், கடும் போட்டியையும் உருவாக்கியுள்ளது.

ராஜேஷ்
இதனிடையே மதுசூதணின் தீவிர ஆதரவாளராக வலம் வரும் ராஜேஷூக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவி மீது ஒரு கண் உண்டு. அவர் மற்றும் ஜே.சி,டி,பிரபாகர் ஆகியோரும் மேயர் சீட் ரேஸில் ஜெயக்குமார் மகனுக்கு போட்டியாக நிற்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications