டிடிவி தினகரன் புதுவை பண்ணை வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு - எங்கேயோ இடிக்குது.....

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் தினகரனின் புதுச்சேரி பண்ணை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

IT dept Raids again in the Dinakarans pondicherry Farm House

அப்போது ஆய்வுக்கு உள்ளான இந்த பண்ணை வீட்டின் கடந்த ஆய்வின் சில அறைகளை வருமானவரித்துறையினர் சீல் வைத்து விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் பண்ணை வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், சீல் வைத்து சென்ற அறையை திறந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு புதுச்சேரியில் உள்ளது. மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் என பிரம்மாண்டமாக உள்ள இந்த வீட்டில் தான் அவரின் சொத்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, அங்கு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

முன்பு நடத்தப்பட்ட சோதனையை பாதியிலே திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், இப்போது இன்று காலை முதல் அங்கு ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நாளை கூட்டத்தொடரில் தன்னுடைய முதல் பேச்சு பல பூகம்பங்களை கிளம்பும் என்று தினகரன் பேசி வந்த நிலையில், அவரை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளவிடாமல் தடுக்கவே இந்த சோதனை கிளப்பிவிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT dept Raids again in the Dinakarans pondicherry Farm House. This is the second time the IT peoples are in Pondicherry farm house. The source says that the sealed rooms are searched again.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X