நீட் மசோதாவுல கையெழுத்து போட மாட்டாரா.. ஆளுநருக்கும் இதற்கும் சம்பந்தமே இல்ல.. அமைச்சர் மா.சு பதில்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், ஆளுநர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் அவ்வப்போது ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆளுநருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

It is funny, Governor to say that he will not sign in neet exemption bill, says Minister Ma Subramanian

அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்கும்போது, "நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒருபோதும் நான் கையெழுத்துப் போட மாட்டேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தென்காசியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, ஆளுநர் கூறிய கருத்து குறித்து பதில் அளித்தார். அவர் பேசுகையில், "நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் நான் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை. நீட் விவகாரத்தில் ஆளுநரின் இந்தப் பேச்சு குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதைப் போன்றது. அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி மக்கள் கொள்கைக்கு எதிராகப் பேசக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம். மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+