மீன்பாடு குறைவு: தொழில் இல்லாமல் தவிக்கும் மீனவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் மீன்பாடு மந்தமாக இருப்பதால் தொழில் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், மணப்பாடு, சிப்பிகுளம், கீழவைப்பார், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு, நாட்டுப்படகு ஆகியவற்றில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பழைய அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகளை கரையில் நிறுத்தி பழுது பார்த்தல் உள்ளிட்ட வேலைகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு செல்கின்றனர். இது மீன் விற்பனையில் ஈடு செய்ய போதுமானதல்ல. கடலிலும் மீன்பாடு குறைந்து காணப்படுவதாலும் அவர்களும் கடலுக்கு செல்ல சுணக்கம் காட்டி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் கடலின் நீரோற்றம் குறைந்து மீன்பாடுகள் அதிகரிக்கும். ஆனால் இந்த வருடம் ஆரம்பம் முதலே மீன்பாடு குறைந்து காணப்படுகிறது. இதனால் செலவு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களுக்கு ஓரளவுக்கு மீன்கள் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர். ஆனால் மேலும் சென்ற பலருக்கு போதிய மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் வெளி மாநில வியாபாரிகளும் கவலையில் உள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications