குவாரிகள் விவகாரம்: விஜயபாஸ்கரிடம் 3 மணிநேரம் ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை!
இன்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது வருமானத் துறை.
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 3 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல் குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அளித்தது. இதையடுத்து விஜயபாஸ்கர் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் இன்று மாலை ஆஜரானார்.
குவாரிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது.
விஜயபாஸ்கரிடம் ஏற்கனவே 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பு தருவேன்
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார்.
-
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
கோயம்புத்தூர்-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications