சொத்து விற்பனையில் மோசடி: முன்னாள் ஐஜி அருள் மகன் வீட்டில் ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் காவல்துறை அதிகாரி ஐஜி மகன் மைக்கேல் அருள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அருளின் மகன் மைக்கேல் அருள் போட் கிளப் பகுதியில் வசிக்கிறார். இவர் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குறைவாக விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

IT raids at Ex IG Arul son'shouse in Chennai

இதனையடுத்து சென்னை போட் கிளப்பில் உள்ள ஐஜி மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மணல் காண்ராக்டர்கள் சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் தியாகராஜனும் வருமான வரித்துறையின் வலையில் சிக்கியுள்ளார்.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

IT raids at Kaleeswari oil firms

இந்த நிலையில் மற்றொரு அரசு ஒப்பந்ததாரர் மைக்கேல் அருள் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The income tax department has launched search and survey operations in house owned by a government contractor IG Arul son in Chennai.
Please Wait while comments are loading...