சென்னை எடிசன் எனர்ஜி இந்தியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரி ஏய்ப்பு புகார் காரணமாக எடிசன் எனர்ஜி இந்தியா பிரைவேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோலார் தகடுகள் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரையடுத்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து வருகின்றனர்.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அடுக்குமாடி வணிகவளாகத்தில் இயங்கி வருகிறது எடிசன் எனர்ஜி இந்தியா நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதிகாரிகளிடம் காவலாளிகள் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்போது தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று சொல்லிவிட்டு மேலே உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

IT raids Chennai based Solar panel contract company Edison energy India private limited

காலை முதல் சுமார் 4 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறையினர் எடிசன் எனர்ஜி இந்தியா நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோலார் தகடுகள் ஒப்பந்தம் செய்து வரும் இந்த நிறுவனம் பல கோடிகள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.

சின்னராஜ் என்பருக்கு சொந்தமானது எடிசன் எனர்ஜி இந்தியா நிறுவனம் நிறுவனம் ரூ. 5 கோடி முதலீடுடன் 2015 ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஒருவரின் பினாமி இவர் என்றும் சொல்லப்படுகிறது. காலை முதல் அதிகாரிகள் இந்த அலுவலக வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax officials raids at Chennai based Solar panel contract company Edison energy India private limited, for the complaint of tax evasion.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற