For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதவு திறந்தே இருக்கும்.. வந்தா வாங்க, வராங்காட்டி போங்க.. இது ஜெயக்குமார்!

ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இ,ணை வந்தால் நல்லது, வராவிட்டாலும் பரவாயில்லை என அமைச்சச்சல் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இ,ணை வந்தால் நல்லது, வராவிட்டாலும் பரவாயில்லை என அமைச்சச்சல் ஜெயக்குமார் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழுவை அறிவித்து புயல் வேகத்தில் வேலை பார்த்து வந்தது. இந்நிலையில் ஈபிஎஸ் அணியினர் முறையாக அழைப்பு விடுக்கவில்லை என ஓபிஎஸ் அணி குற்றம் சாட்டியது.

சேலத்தில் ஓபிஎஸ் அணியின் ஆதரவு எம்எல்ஏ செம்மலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் அணியுடன் சேர ஆதரவார்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதில் தடை ஏற்பட்டுவந்தது.

நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே..

நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே..

ஆனால் அவ்வப்போது ஈபிஎஸ் அணியினர் மட்டும் ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என தாராளம் காட்டினர். 2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக ஓபிஎஸ் கோஷ்டி.

கதவு திறந்தே இருக்கும்..

கதவு திறந்தே இருக்கும்..

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைய வந்தால் நல்லது என கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வராவிட்டாலும் பரவாயில்லை..

வராவிட்டாலும் பரவாயில்லை..

அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இரட்டை இலைச் சின்னத்தை பெறவே ஈபிஎஸ் கோஷ்டி ஓபிஸ் தரப்புடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வந்தா வாங்க வராட்டி போங்க என கூறியுள்ளார்.

ஏற்னவே ஏழரையை கூட்டிய அமைச்சர்

ஏற்னவே ஏழரையை கூட்டிய அமைச்சர்

ஏற்கனவே ஓபிஎஸை அமெரிக்க அதிபர் ட்ரம்போடு ஒப்பிட்டு நக்கலடித்ததார் ஜெயக்குமார். அதற்கு ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Jayakumar says that If the OPS team come for talk its good. If they dont come also no problem he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X