தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு
சென்னை: தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பாத்திமா முஸாபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள மாநில முஸ்லிம் லீக் கமிட்டி எம்.பியும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் 03.03.2012 தேதியிட்ட தவறான தீர்ப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் டெல்லி உயர் நீதி மன்றத்தில் 21.03.2012 அன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, நீதிபதி விபின் சாங்கி (வழக்கு எண்.டபிள்யூ.பி.(சி) 1624/2012 மற்றும் சி.எம்.என்ஓஎஸ்.355_51/2012) ஏற்றுக் கொண்டு, இ.அஹமது மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அரசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணை அமைச்சராக இருந்து வரும் இ.அஹமத் மற்றும் அவரின் அரசியல் செயல்பாடுகளுக்குத் துணையாக இயங்கி வரும் கே.எம்.காதர் மொய்தீன், தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் மிகப்பெரும் முறைகேட்டைச் செய்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உம்மன்சாண்டி தலைமயிலான கேரள மாநில அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்துள்ளன. இதற்கு தேவையான ஆதரங்களை சேகரித்து வைத்துள்ளோம்.
எனவே, இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ள மத்தியில் ஆளும் ஐக்கி முற்போக்கு கூட்டணி அரசாங்கம் களைக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை முன்வைத்து, இந்திய ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மேலும் இ.அகமது, கே.எம்.காதர் மொய்தீன் மற்றும் அவர்களது கூட்டத்தாருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட மத்திய தேர்தல் ஆணையத்தின் மீதும் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications