பொங்கல் பரிசு கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால்.. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை!
மயிலாடுதுறை : பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசே கரும்புகளை கொள்முதல் செய்ய உள்ளது. இதற்காக கொள்முதல் செய்யவுள்ள கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
மேலும், தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக நிறுத்த முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, கரும்பு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கி, கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கரும்பு ரூ.33
மேலும், கரும்புக்கு உண்டான தொகை அதிகபட்சமாக போக்குவரத்து செலவுகள் உட்பட ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் , ரூ.72.38 கோடி நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயமான விலையில் தரமான கரும்பை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்கள், வியாபாரிகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள கரும்புகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உடனிருந்தார். முன்னதாக சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலைக் கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

இடைத்தரகர்கள் தலையிட்டால்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வைத்த கோரிக்கை
அப்போது விவசாயிகள், கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸிடம் கோரிக்கை வைத்தனர்.

கரும்பு வழங்கிய விவசாயிகள்
அதனைக் கேட்டுக்கொண்ட ஜெ.ராதாகிருஷ்ணன் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications