For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹால்ஸ் சாலை... இனிமேல் "தமிழ்ச் சாலை"; ஆர்.கே.நகர் தெருக்களுக்கு எல்இடி விளக்குகள்- அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பை செய்திக்குறிப்பின் மூலமாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் தனது அறிக்கையில் தமிழக அரசு விளக்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவுகோலுடன் கூடியதாக மாறும் சென்னை

சர்வதேச அளவுகோலுடன் கூடியதாக மாறும் சென்னை

சர்வதேச அளவுகோலுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மாநகரமாக சென்னை மாநகரை உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்வசர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆர்.கே.நகரில் எல்இடி லைட்டுகள்

ஆர்.கே.நகரில் எல்இடி லைட்டுகள்

சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் 6030 தெரு மின் விளக்குகளுக்கு மாற்றாக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள்; டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், கொருக்குப்பேட்டை- மீனாம்பாள் நகரில் 3 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆலந்தூர், சவுரித் தெருவில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 சமூக நல மையக் கட்டடங்கள்; டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், புஜ்ஜியம்மாள் தெருவில் 42 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவையாளர்களுக்கான ஓய்வு அறைகள்;

ஆரம்ப சுகாதார மையங்கள்

ஆரம்ப சுகாதார மையங்கள்

மாதவரம்-காந்தி பிரதான சாலை மற்றும் லட்சுமிபுரம், விருகம்பாக்கம்-காமராஜ் நகர், சோழிங்கநல்லூர்-கண்ணகி நகர், முதல் பிரதான சாலை மற்றும் எழில்நகர் முதல்குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் 3 கோடியே 92 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள்;

வகுப்பறைக் கட்டடங்கள்

வகுப்பறைக் கட்டடங்கள்

மாதவரம் - கன்னியம்மன் பேட்டை, பால்பண்ணை மற்றும் ஆண்டார் குப்பம், திருவொற்றியூர் - பாடசாலை தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளிகளில் 3 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள்; சைதாப்பேட்டை - மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் அண்ணாநகர்-செனாய் நகரில் அமைந்துள்ள சென்னை பள்ளிகளில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உறைவிடப் பள்ளிக் கட்டடங்கள்; பெரம்பூர் - கல்யாணபுரத்தில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகக் கட்டடங்கள்;

பூங்காக்கள்

பூங்காக்கள்

மாதவரத்தில் 5 பூங்காக்கள், பெருங்குடியில் 3 பூங்காக்கள் மற்றும் சோழிங்க நல்லூரில் 13 பூங்காக்கள், என 10 கோடியே 12 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 21 பூங்காக்கள்; திருவொற்றியூர் - சி.பி.சி.எல்லே அவுட் நெடுஞ்செழியன் தெரு மற்றும் மாதவரம் - தணிகாச்சலம் தெரு ஆகிய இடங்களில் 90 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வார்டு அலுவலகக் கட்டடங்கள்; எர்ணாவூர் - அகில இந்திய வானொலி நகரில் 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுனாமி குடியிருப்புக் கட்டடம்;

தமிழ்ச் சாலை

தமிழ்ச் சாலை

புளியந்தோப்பு - யானைகவுனி பேசின் பாலம் சாலையில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் நிலையம்; எழும்பூர், ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலை பெயர்பலகை;

கீழ்ப்பெண்ணாத்தூரில் எம்எல்ஏ அலுவலக கட்டடம்

கீழ்ப்பெண்ணாத்தூரில் எம்எல்ஏ அலுவலக கட்டடம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் 764 சதுரஅடி கட்டட பரப்பளவில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 41 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM Jayalalitha has announced more infrastructure schemes to Chennai and renamed Halls Road as Tamil Salai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X