சிறையை போன்றே போயஸ் கார்டனிலும் யாரையும் சந்திக்க மறுக்கும் 'அம்மா'?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 22 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூட பெங்களூர் வரை சென்றும் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டில் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம். ஆனால் பன்னீர் செல்வத்தை மட்டும் சில நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அதிமுகவோ, தமிழக அரசோ உறுதி செய்யவில்லை.
சிறையில் இருந்து வெளியே வந்த தனக்கு ஆறுதலாக கடிதம் எழுதிய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் தீபாவளியையொட்டி அவர் கட்சியினர் மற்றும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதல்வர பன்னீர் கூட வாழ்த்து தெரிவிக்காதது அதிமுகவினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications