லெட்டர் போடுவதை விட்டுவிட்டு ஜெ. ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கட்டும்: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வங்கக் கடலில் கோடியக்கரைக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப் பேட்டை, சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 36 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நமது எல்லைக்குள் புகுந்து மீனவர்களை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தான் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 600க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். அது மட்டுமின்றி கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யாமல் குறைந்தது 3 மாதம் சிறைத் தண்டனை விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. மீனவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும், படகுகளை பறிமுதல் செய்து வாழ்வாதாரங்களை பறிப்பதும் தான் மனிதநேய செயலா? என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.
இந்தியா-இலங்கை இடையிலான கடல்பரப்பு மிகவும் குறுகியது என்பதால் மீனவர்கள் வழிதவறி எல்லை தாண்டி வந்தால் கூட அவர்களை கைது செய்யக் கூடாது என இலங்கை அரசை பிரதமர் மன்மோகன் சிங் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் மதிக்காத இலங்கை அரசு, தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்; மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 42 படகுகளும் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் ஒரே நாளில் 250 மீனவர்களை அவர்களின் 36 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை கடற்படையின் செயல் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும்படி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தமிழக மீனவர்களை என்ன செய்தாலும் இந்தியா கேட்காது என்ற தைரியத்தில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை இனியும் அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்தாக அமைந்துவிடும். எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் இலங்கைக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மீனவர்கள் பிரச்சனையில் தமிழக அரசு கடமைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் கைது தொடர்பாக இதுவரை 34 முறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, இனியும் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல் மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தின் உணர்வை மத்திய அரசுக்கு தெரிவிக்க ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications