சேலத்தில் ஜெயலலிதா இன்று பிரசாரம்: 16 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் !
சேலம்: சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதி வேட்பாளர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய 5 தொகுதி வேட்பாளர்கள் என 16 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.
இதற்காக சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடி காளிகவுண்டன்பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட கூத்தாடிபாளையம் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள பகுதியில் தேர்தல் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, மேடை அருகே ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து தரையிறங்க இறங்கு தள வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரசாரக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications