Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 68 வயதில் தமிழகத்தின் 19வது முதல்வராகியுள்ளார் ஜெயலலிதா. அவரைப் பொறுத்தவரை இது 6வது பதவியேற்பாகும். ஜெயலலிதாவின் அரசியல் பாதை முட்களால் நிரம்பியது. எந்த ஒரு தலைவரையும் போலவே ஜெயலலிதாவும் சவால்களால் சூழப்பட்டவர்தான். ஆனால் அத்தனை சவால்களையும் ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறும் ஒரு வித்தியாசத் தலைவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகம் இல்லை.

1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா. வேதவள்ளி பின்னாளில் சந்தியா என்ற பெயரில் கன்னடத் திரையுலகில் நடிகையாக வலம் வந்தார். தமிழிலும் நடிகையாக திகழ்ந்தவர்.

தனது தந்தை இளம் வயதிலேயே மறைந்ததைத் தொடர்ந்து தனது தாய் வழிப் பாட்டு வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் ஜெயலலிதா. பாட்டி வீடு பெங்களூரில் உள்ளது. அங்கு ஆரம்ப கால பள்ளிப் படிப்பை படித்தார். பின்னர் திரைப்படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். சின்னாட கோம்பே என்ற கன்னடப் படம்தான் ஜெயலலிதாவின் முதல் திரைப்படம்.

சென்னைக்கு வந்த ஜெயலலிதா

சென்னைக்கு வந்த ஜெயலலிதா

பின்னர் வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க தேர்வானதால் தாயுடன், சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஜெயலலிதாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் புதிய பாதையை கண்ணில் காட்டியது. எம்.ஜி.ஆரின் அறிமுகம், ஜெயலலிதாவை வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றது. படு வேகமா திரையுலகில் பிரபலமானார் ஜெயலலிதா. கூடவே அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார்.

பிரச்சார பீரங்கி

பிரச்சார பீரங்கி

அதிமுகவில் இணைந்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார். அவரது வருகை, பல அதிமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது, எரிச்சலைக் கொடுத்தது. அவரை அடக்க முடியாமல் தவித்தனர். ஆனால் இந்த. எதிர்ப்புகளை தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான்.

இயல்பான வளர்ச்சி

இயல்பான வளர்ச்சி

எம்.ஜி.ஆரே கூட ஜெயலலிதாவின் வேகத்திற்கு அவ்வப்போது பிரேக் போட் வேண்டிய நிலை இருந்தது. ஆனாலும் அவரது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தவிர்க்கவும் முடியவில்லை. இயல்பான ஒரு வளர்ச்சியாக ஜெயலலிதாவின் முன்னேற்றம் இருந்தது.

கொ.ப.செ.

கொ.ப.செ.

1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. 194 சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா. அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது.

உடைந்த அதிமுக

உடைந்த அதிமுக

1988ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு கட்சியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. ஆனால் 1989 தேர்தலில் ஜெயலலிதா தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு, அடுத்த தலைவர் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இதையடுத்து ஜானகி விலகிக் கொண்டார். அதிமுக ஒரே கட்சியாக மீண்டும் இணைந்தது. ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடை போட ஆரம்பித்தது அதிமுக.

ஜெயலலிதாவின் அதிமுக

ஜெயலலிதாவின் அதிமுக

1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். சட்டசபையில் எப்போதும் புயல்தான். 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் முறையாக முதல்வர்

முதல் முறையாக முதல்வர்

1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேரத்ல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலிதா.

சொத்துக் குவிப்பு வழக்கு

சொத்துக் குவிப்பு வழக்கு

1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது. இன்று வரை விடாமல் தொடர்கிறது இந்த வழக்கு.

சிறையில் ஜெயலலிதா

சிறையில் ஜெயலலிதா

1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார். ஆனாலும் 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015ம் ஆண்டு சிறை தண்டனையிலிருந்தும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தும் மீண்டு வந்தார் ஜெயலலிதா. மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இன்று 2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

காலம் ஜெயலலிதாவுக்கு இன்னும் என்னவெல்லாம் வைத்துள்ளது தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பு அவர் செய்த தவறுகளையெல்லாம் இந்த முறை திருத்திக் கொண்டு புதிய உத்வேகத்துடன் அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை மட்டும் மக்களிடம் அதிகமாகவே உள்ளது.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+