நான் போட்டியிட்டால் தோல்வியைடைந்து விடுவோம் என்று அதிமுகவிற்கு பயம்!... ஜெ. தீபா பகீர் குற்றச்சாட்டு
அதிமுகவின் தோல்விபயம் காரணமாக ஆர்.கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் தான் போட்டியிட்டால் அதிமுகவிற்கு தோல்வி நிச்சயம். அந்த பயம் காரணமாகவே தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜெ. தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : என்னுடைய வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் எனக்கு அழைப்பு வந்தது. நீங்கள் போட்டியிடாதீர்கள், அப்படி போட்டியிடாமல் இருந்தால் நாம் வேறு முறையில் அதை சமரசம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

அப்படி மனு தாக்கல் செய்தால் எந்த அளவிற்கும் செல்வோம், உங்களது வேட்பு மனுவைக் கூட தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னார்கள். கடந்த முறை கூட எனக்கு இது போன்ற பல மிரட்டல்கள் வந்துள்ளன. என் மீது ஆசிட் வீசுவேன் என்றெல்லாம் கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள். ஆனால் நான் போட்டியிடுவேன் என்று உறுதியாக இருந்தேன்.
கடந்த முறையே மனுவை நிராகரிக்கச் செய்வோம் என்றார்கள், இந்த முறை அதை அவர்கள் செய்துள்ளனர். இந்த ஒற்றுமையாக இருப்பதால் அதை அவர்கள் செய்துள்ளனர்.
ஆர்கே நகர் மக்களுக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அத்தையை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது. என்னுடைய வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டு நான் போட்டியிடக் கூடாது என்று இப்படி ஒரு தேவையில்லாத காரணத்தை சொல்லி மனுவை நிராகரித்துள்ளனர் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications